தில்லுக்கு துட்டு – முதல் நாளில் 4 கோடி வசூல்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், ஷனாயா, சௌரப் சுக்லா, கருணாஸ் மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு’.

இப்படம் வெளியான முதல் நாளிலேயே சுமார் 4 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தானம் இதற்கு முன் நாயகனாக நடித்து வெளிவந்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான்’ படங்களை விட இந்தப் படத்திற்கு பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது.

நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த வாரத்திலேயே இந்தப் படத்தின் வசூல் 10 கோடியைத் தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘தில்லுக்கு துட்டு’ படம் மூலம் படம் வாங்கிய அனைவருக்கும் லாபமான ‘துட்டு’ கிடைக்க வைத்துள்ள சந்தானம் வெற்றிகரமான ஹீரோவாக அடுத்த கட்டத்தை அடைந்துள்ளார்.

Read Previous

Kamal tweets about Sabaash Naidu editing

Read Next

அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் ?