சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை இரண்டு நாட்களுக்கு முன்பு எளிமையாக நடைபெற்றது.
படத்தின் படப்பிடிப்பு இந்த மாதக் கடைசியில் ஆரம்பமாக உள்ளது. ஆனால், இதுவரை படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கப் போகிறவர் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படாமலே உள்ளது.
இதுவரை அஜித்துடன் ஜோடி சேராதவர்களை படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் சிவா முடிவு செய்துள்ளாராம்.
நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகிய முன்னணி ஹீரோயின்கள் ஏற்கெனவே அஜித்துடன் நடித்து விட்டார்கள். சமந்தா, இனி தொடர்ந்து நடிப்பாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.
அவர்களுடன் முன்னணி நடிகையாக இருக்கும் மற்றொருவர் காஜல் அகர்வால். இவர்தான் இன்னும் அஜித்துடன் நடிக்காமல் இருக்கிறார். எனவே, காஜலுடன் ஏற்கெனவே பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துவிட்டார்களாம்.
தேதிகள் சரி வந்தால் காஜல், அஜித் படத்தில் நடிப்பது உறுதி என்கிறார்கள்.