பெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்

லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில், இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில், மரியா மனோகர் இசையமைப்பில் சமுத்திரக்கனி, வீரா, சுந்தர், சாந்தினி, அஸ்மிதா, வர்ஷா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பெட்டிக்கடை’.

இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார்.

இப்படத்திற்காக மரியா மனோகர் இசையில் நா.முத்துக்குமார் எழுதிய ‘சுடலைமாட சாமிகிட்ட என்ன வேண்டிக்கிட்ட’ என்ற பாடல் யு டியூபில் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு 18 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

இந்தப் பாடலை ஸ்ரேயா கோஷல் மிக அருமையாகப் பாடியிருக்கிறார். இந்தப் பாடலைப் பாடியது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

தேசிய விருது பெறும் அளவில் அந்தப் பாடல் இருப்பதாக ரசிகர்களும் பாராட்டுகிறார்கள்.

‘பெட்டிக்கடை’ பிப்ரவரி 22ம் தேதி வெளியாகிறது.

Read Previous

தமிழ் சினிமா – பிப்ரவரி 15, 2019 வெளியாகும் தமிழ்ப் படங்கள்

Read Next

‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’