‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’

எஸ்கேப் ஆர்ட்டிஸ் மோஷன் பிக்சர்ஸ் மதன் தயாரிக்க, கௌதம் மேனன் இயக்கத்தில், தர்புகா சிவா இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு தணிக்கை முடிந்து ‘யு-ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்ததால், படம் எப்போது வெளிவரும் என தனுஷ் ரசிகர்களும், கௌதம் மேனன் ரசிகர்களும் காத்திருந்தனர்.

தற்போது அனைத்து வேலைகளையும் முடித்து படத்தை தணிக்கைக்கு அனுப்பப் போவதாக படத்தின் தயாரிப்பாளர் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இன்று படம் தணிக்கை செய்யப்பட்டு ‘யு-ஏ’ சான்றிதழ் பெற்றதாக தயாரிப்பாளர் மதன் அறிவித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளிவந்து யு டியூபில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

படம் எப்போது வெளியாகும் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளார்கள்.

Read Previous

பெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்

Read Next

எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்