வெளிநாடுகளிலும் அதிக தியேட்டர்களில் ‘ரெமோ’

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்க அனிருத் இசையமைப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள ‘ரெமோ’ படம் இன்னும் மூன்று நாட்களில் 7ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளா இந்தியாவின் பிற பகுதிகளில் மற்றும் வெளிநாடுகளிலும் இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பிரபல தயாரிப்பாளரான ஷிபு தமீன்ஸ் இப்படத்தை வெளியிடுகிறார்.

வெளிநாடுகளிலும் இப்படம் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோரது படங்களுக்கு இணையாக திரையிடப்பட உள்ளது.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகள் என தமிழர்கள் வசிக்கும் பல நாடுகளிலும் இப்படத்தை திரையிடுகிறார்கள்.

‘ரெமோ’ படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

Zee Tamil’s Poojai Special movies and shows to excite viewers

Read Next

தயாரிக்கும் படத்திற்கு தனி கவனம் செலுத்தும் பிரபுதேவா

Most Popular