“பென்சில், ஜுங்கா, 96’ போன்ற பல படங்களை வினியோகம் செய்தவரும், தியேட்டர்களை நடத்தி வருபவருமான எஸ்.பிரபாகர் பவர் கிங்ஸ் ஸ்டுடியோ சார்பில் தயாரிக்கும் படம் ‘ஐபிசி 376’.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் அவர் முதல் முறையாகத் தயாரிக்கும் இந்தப் படத்தை ராம்குமார் சுப்பாராமன் இயக்குகிறார்.
பிரபுசாலமன், பாலசேகரன் உள்ளிட்ட இயக்குனர்களிடம் பல படங்களில் பல மொழிகளில் இணை இயக்குனராகப் பணிபுரிந்தவர் ராம்குமார் சுப்பாராமன்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,
“இது த்ரில்லர் படம். சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், காமெடி எல்லாம் கலந்த கமர்ஷியல் கதை.
நந்திதா ஸ்வேதா முதன் முறையாக ஆக்சன் கதாநாயகியாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார். படம் முழுக்க ஆக்ஷன் நிரம்பியிருக்கும்.
சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் ஆக்ஷன் கோரியோகிராஃபி பண்ணுகிறார். படத்தில் வித்தியாசமானதொரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இது ஹீரோக்கள் பண்ண வேண்டிய கதை. ஆனால், ஹீரோக்கள் பண்ண முடியாத கதை.
இப்ப சமூக வலைதளங்கள்தான் பரபரப்பாக இயங்கிக்கிட்டிருக்கு. டைட்டிலை வலைதளத்தில் தேடும்போதே இது எது சம்பந்தமான கதை என்பதை யூகித்து விடுவார்கள். ஆனால் என்ன கதை என்பதை யூகிக்க முடியாது.
பெண்களை இழிவுபடுத்தி வந்து கொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில், இது பெண்கள் கொண்டாட வேண்டிய படமாக இருக்கும்,” என்கிறார்.