பல தரமான வெற்றிப் படங்களைக் கொடுத்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம், ‘விஸ்வாசம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களைத் தயாரிக்கிறது.
அதில் ஒரு படமான துரை செந்தில்குமார் இயக்கும் படம் இன்று குற்றாலத்தில் படப்பிடிப்புடன் ஆரம்பமானது.
‘எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி’ ஆகிய படங்களுக்குப் பிறகு துரை செந்தில்குமார் இயக்கும் படம் இது.
இப்படத்தில் ‘புதுப்பேட்டை’ படத்திற்குப் பிறகு 13 ஆண்டுகள் கழித்து தனுஷுடன் மீண்டும் சினேகா நடிக்கிறார்.
விவேக் மெர்வின் இசையமைக்கும் இந்தப் படம் சத்யஜோதி தயாரிக்கும் 34வது படமாகும். ‘தொடரி’ படத்திற்குப் பிறகு அந்நிறுவனத்துடன் தனுஷ் இணையும் படம் இது.
இந்தப் படத்திற்குப் பிறகு சத்யஜோதி நிறுவனத்தின் 35வது படமாக தனுஷ் நடிக்க உருவாக உள்ள படத்தை ‘ராட்சசன்’ படத்தை இயக்கிய ராம்குமார் இயக்க உள்ளார்.
தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார்.