‘திருட்டுப் பயலே 2’ படத்தில் அமலா பால்

சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், மாளவிகா, சோனியா அகர்வால் மற்றும் பலர் நடிக்க 2006ம் ஆண்டில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘திருட்டுப் பயலே’.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

படத்தின் நாயகனாக பாபி சிம்ஹா, முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா ஆகியோர் நடிக்கப் போவதாக அறிவித்தார்கள்.

இப்போது படத்தின் நாயகியாக அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

மற்றும் விவேக், ரோபோ சங்கர் ஆகியோரும் நடிக்க உள்ளார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 2ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.

Read Previous

‘கொடி, காஷ்மோரா’ – திரையுலகத்தினரைப் பற்றி ஒரு ஒளிப்பதிவாளரின் வருத்தம்

Read Next

நான் அனுபவித்து நடித்த படம் ‘திட்டிவாசல்’ – நாசர்

Most Popular