அனிருத்தின் பேய் பயமும், ‘ரம்’ படமும்…

ஆல் இன் பிச்சர்ஸ் விஜயராகவேந்திரா தயாரித்து, அறிமுக இயக்குநர் சாய்பரத் இயக்கி இருக்கும் ‘ரம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷ் தம்பியாக நடித்த ஹ்ரிஷிகேஷ், ‘சூது கவ்வும்’ நாயகி சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன், விவேக் மற்றும் பலர் நடிக்கம் படம் ‘ரம்’.

‘ரம்’ திரைப்படக் குழுவினரைப் போன்ற இளம் கூட்டணியோடு பணியாற்றியது எனக்கு புது உற்சாகத்தை அளித்தது. அதோடு என்னை மீண்டும் இளமையாகவும் மாற்றி இருக்கிறது. நம்முடைய இளைஞர்களின் மனதை இசையால் கவருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால், அதை தன்னுடைய மனதை வருடும் இசையால் செய்திருக்கிறார் அனிருத். இளையராஜா என்னும் இசை கடலில் கண்டெடுத்த முத்து தான் அனிரூத்,” என்றார் விவேக்

“பொதுவாகவே பேய் படங்கள் என்றால் எனக்கு அவ்வளவு பயம். அதுமட்டுமன்றி, 13 ஆம் நம்பர் என்பது பேய்களை குறிக்கும் எண் என்பதால், அந்த எண்ணின் மீதும் எனக்கு பயம் தான். ஆனால், தற்போது நான் இசையமைத்திருக்கும் இந்த ‘ரம்’, என்னுடைய 13 ஆவது படம், அதுவும் பேய் படம்.

‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் வெளிவந்த போது என்னை முதன் முதலா பாராட்டிய செலிபிரிட்டி விவேக் சார். அப்புறம்தான் எல்லாரும் பாராட்டி அது பி.எம்.வரைக்கும் போச்சு. இந்தப் படத்துல அவர் நடிச்சதுக்கு ரொம்ப நன்றி,” என்றார் இசையமைப்பாளர் அனிரூத்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, ஞானவேல் ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா, நடன இயக்குனர் காயத்ரி ரகுராம், நடிகர் ஆதவ் கண்ணதாசன், ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் கதாநாயகன் கோகுல் ஆனந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ரம் திரைப்படத்தின் படக்குழுவினர்களான தயாரிப்பாளர் ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா, இயக்குநர் சாய் பரத், இசையமைப்பாளர் அனிரூத், ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, நரேன், விவேக், அம்ஜத், அருண் சிதம்பரம், பாடகர் சிட் ஸ்ரீராம், பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேக் வேல்முருகன் மற்றும் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு ஆகியோரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

Read Previous

‘ரெமோ’ தெலுங்கு இசை வெளியீட்டில் சமந்தா

Read Next

‘மூன்று முகம்’ ரீமேக்கில் ராகவலா லாரன்ஸ்

Most Popular