மீண்டும் நடிக்க வந்த சங்கீதா

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சோனு சூட் வில்லனாக நடிக்கிறார். மற்றும் பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார்.

இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சங்கீதா நடிக்கிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த ‘நெருப்புடா’ படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்த சங்கீதா அதற்குப் பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

இப்போது ‘தமிழரன்’ படம் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார்.

இது பற்றி சங்கீதா கூறுகையில்,

“எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக இல்லாததால் நிறைய படங்களை நானே ஒதுக்கிவிட்டு ஒதுங்கி இருந்தேன்.

இந்தப் படத்தில் என் கேரக்டர் மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் விதமாக இருந்ததால் நடிக்க சம்மதித்தேன். மிகப் பெரிய மருத்துவமனையை நடத்தும் டாக்டர் வேடம். என் கதாபாத்திரம் பவர்புல்லான ஒன்று,” என்கிறார் சங்கீதா.

Read Previous

தமிழ் சினிமா – மார்ச் 15, 2019 வெளியாகும் படங்கள்

Read Next

கிரிஷ்ணம் – விமர்சனம்