இதுதான் இளையராஜாவின் மேஜிக்

திரையிசை உலகில் என்றுமே இளையராஜாதான் ராஜா என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

காலம் கடந்தும் அவருடைய இசை நிற்கும் என்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகியுள்ள ஒரு வீடியோவே சாட்சி.

ஸ்ரீதேவி நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தை இயக்கிய கௌரி ஷிண்டே இயக்கத்தில் ஷாரூக் கான், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள ‘டியர் ஜிந்தகி’ படம் நாளை 25ம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படத்திற்காக இளையராஜா இசையமைத்து 1983ம் ஆண்டு வெளிவந்த ‘சத்மா’ படப் பாடலான ‘ஏ ஜிந்தகி..’ படப் பாடலை தற்போது ரி-க்ரியேட் செய்து அதில் ஷாரூக், ஆலியா சம்பந்தப்பட்ட காட்சிகளை இணைத்திருக்கிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான இந்த வீடியோவை இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

இளையராஜாவின் இசையை ஹிந்தி ரசிகர்களும் இன்னமும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

‘டியர் ஜிந்தகி’ படத்தில் ரி-க்ரியேட் செய்யப்பட்டுள்ள பாடலின் வீடியோ…கீழே…

இந்தப் பாடல் பாலுமகேந்திரா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த ‘சத்மா’ படத்தில் இடம் பெற்ற பாடல்..‘சத்மா’ படத்தில் இடம் பெற்ற பாடல் வீடியோ..கீழே…

https://youtu.be/0BXqAnZWqdQ

தமிழில் ரஜினிகாந்த், மாதவி நடிப்பில் வெளிவந்த ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் இடம் பெற்ற ‘என் வாழ்விலே வரும் அன்பே வா…’ பாடலைத்தான் ‘சத்மா’ படத்தில் ‘ஏ ஜிந்தகி…’ பாடலாக இடம் பெற வைத்தார் இளையராஜா.

‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் இடம் பெற்ற பாடல் வீடியோ…

https://youtu.be/QUw86lKY2Sk

தமிழோ, ஹிந்தியோ…இசைக்கு மொழியில்லை என்பதை 23 வருடங்கள் கடந்தும் இந்தப் பாடல் இன்னும் இனிமையுடன் ரசிக்க வைக்கிறது.

Read Previous

S3 audio on 27 November

Read Next

Maaveeran Kittu gets U

Most Popular