டிவி ஒளிபரப்பில் ‘பிச்சைக்காரன்’ சாதனை

தமிழ்த் திரையுலகில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற ‘பிச்சைக்காரன்’ திரைப்படம், தெலுங்கிலும் வெளியாகி அங்கும் பெரிய வெற்றியைப் பெற்றது.

கடந்த 13ம் தேதி சன் டிவியில் ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் ஒளிபரப்பானது.

அந்த ஒளிபரப்பு, தென்னிந்திய டிவி ஒளிபரப்பு அளவில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

17 லட்சத்து 69 ஆயிரத்து 600 புள்ளிகள் (Impression)-ஐ ‘பிச்சைக்காரன்’ படம் பெற்றுள்ளது.

150 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வெளிவந்த ‘பாகுபலி’ தெலுங்குப் படம்தான் 14 லட்சத்து 91 ஆயிரம் புள்களிகளைப் பெற்று இதுவரை முதலிடத்தில் இருந்து வந்தது.

அந்த சாதனையை இப்போது ‘பிச்சைக்காரன்’ படம் முறியடித்துள்ளது.

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷ்ன் தயாரிப்பில் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சாட்னா டைட்டஸ் மற்றும் பலர் நடித்த படம் ‘பிச்சைக்காரன்’.

அந்தப் படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சைத்தான்’ படம் டிசம்பர் 1ம் தேதி வெளியாக உள்ளது.

Read Previous

Maaveeran Kittu gets U

Read Next

FEFSI goes on strike

Most Popular