‘ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி’ படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்து இயக்கி முடித்துள்ள படம் ‘ஹவுஸ் ஓனர்’.
படம் பற்றி இயக்குனர் ராமகிருஷ்ணன் கூறுகையில்,
‘‘ஆடுகளம்’ கிஷோர் இந்தப் படத்தில் மிரட்டியிருக்கிறார். பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்ப் நடிப்பை பார்த்தவுடன், நடிப்பு கூட பரம்பரை சொத்துதான் என தோன்றும்.
எனது தோழி விஜயலக்ஷ்மியும் அவளது சகோதரி சரிதாவும் லவ்லினுடைய திறமையை எண்ணி பெருமைப்படலாம். ‘பசங்க’ திரைப்படத்தின் மூலமாக தேசிய விருது பெற்றவரும், ‘கோலிசோடா’ படத்தில் நடித்திருந்த கிஷோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நாம் சராசரி வாழ்வில் சந்திக்கும் ஒரு அம்மாவை ஸ்ரீரஞ்சனி பிரதிபலித்திருக்கிறார். தரமான நல்ல கதைகள் திறமையான நடிகர்களை தானே தேடிக்கொள்ளும் என்பதில் எனக்கு இங்கேதான் நம்பிக்கை பிறந்தது.
இசையமைப்பாளர் ஜிப்ரான் போன்ற கலைஞனுடன் இந்தப் படத்தில் பணியாற்றியதில் பெருமிதம் கொள்கிறேன். மதன் கார்க்கி மற்றும் அனுராதா பாடல்களை எழுதியுள்ளார்கள். பாடல்களுக்கு உயிரூட்டும் விதமாக சின்மயி, சத்யபிரகாஷ் மற்றும் பென்னி தயாள் பாடியுள்ளனர்.
‘மகளிர் மட்டும்’ புகழ் பிரேம் சிறந்த முறையில் எடிட்டிங் செய்துள்ளார். கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவாளராகவும், தபஸ் நாயக் ஆடியோகிராபியும் கையாண்டுள்ளனர்.
இப்படத்தை கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன, அந்த வரிசையில் இந்தப் படமும் வெற்றிபெறும் என நம்புகிறேன்,” என்கிறார்.