விஜய் நடிக்கும் ‘பைரவா’ படப்பிடிப்பு நிறைவு…

“எங்க வீட்டு பிள்ளை , உழைப்பாளி, நம்மவர், தாமிரபரணி, படிக்காதவன் , வேங்கை, வீரம்” உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட வெற்றி படங்களை தயாரித்த பாரம்பரிய நிறுவனமான நாகி ரெட்டியின் நல்லாசியுடன் B. வெங்கட்ராம ரெட்டி வழங்க விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில், பரதன் கதை, திரைக்கதை, வசனம் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு நேற்று ‘பூசணிக்காய்’ உடைப்புடன் இனிதே நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் விஜய், தயாரிப்பாளர் B .வெங்கட்ராம ரெட்டி, B. பாரதி ரெட்டி, இயக்குநர் பரதன், ஒளிப்பதிவாளர் சுகுமார், எடிட்டர் பிரவீன், கலை இயக்குனர் பிரபாகரன், தலைமை நிர்வாகி ரவிச்சந்திரன், முதன்மை நிர்வாகி குமரன் மற்றும் படக் குழுவினருடன் ‘பைரவா’ திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட உள்ள ஸ்ரீ கிரீன் புரொடக்க்ஷன்ஸ் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள் .

இப்படத்தில் , ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பிராமையா,ச ரத் லோகிதாஸ்வா, சதிஷ், அபர்ணா வினோத், சிஜு ரோசலின், பாப்ரி கோஷ், மைம் கோபி, ஸ்ரீமன் ஆகியோர் மிக முக்கியாமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஜய் நடிக்கும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் முதன் முறையாக இசையமைக்கும் படம் இது. அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.

விரைவில் இப்படத்தின் இசை வெளியீடும், பொங்கலுக்கு பட வெளியீடும் இருக்கம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

AAA single for Christmas

Read Next

Vivek Oberoi joins Thala 57

Most Popular