பார்த்திபன் இயக்கத்தில் சத்யா இசையமைப்பில் சாந்தனு, பார்வதி நாயகர் மற்றும் பலர் நடிக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவை, தன்னுடைய குருநாதர் கே. பாக்யராஜுக்கு மிகப் பெரும் பாராட்டு விழாவாகவே நடத்தி விட்டார் பார்த்திபன்.
பிரம்மாண்ட முறையில் நடைபெற்ற ‘சாதனை சல்யூட் விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்ஏ. சந்திரசேகர், ஷங்கர், கே எஸ் ரவிக்குமார், விக்ரமன், ஆர் கே செல்வமணி, சந்தான பாரதி, பி வாசு, பாண்டியராஜன், ஜி எம் குமார், சேரன், லிங்குசாமி, சரண், வி சேகர், பிரவீன் காந்த், ஞான ராஜசேகரன், எஸ் எம் குமார், மகிழ் திருமேனி, பாலாஜி, விஜய், கரு பழனியப்பன், மோகன் ராஜா, கார்த்திக் சுப்பாராஜ், நலன் குமரசாமி, சக்தி சரவணன், சுந்தர் சி, நந்தா பெரியசாமி, பிருந்தா சாரதி, பிரபு, நாசர், சிவகுமார், எஸ் பி பாலசுப்பிரமணியம், விஷால், கார்த்தி, சாந்தனு, கீர்த்தனா, மன்சூர் அலி கான், டிரம்ஸ் சிவமணி, டி சிவா, சுகன்யா, டாக்டர் கே கணேஷ், நெப்போலியன், கங்கை அமரன், பவர் ஸ்டார் – ஸ்ரீனிவாசன், ரமேஷ் கண்ணா, மயில்சாமி, ஜாகுவார் தங்கம், இசையமைப்பாளர் சி சத்யா, ஆர் கே சுரேஷ், அருள்பதி, பூர்ணிமா பாக்கியராஜ், ரோகினி, சுஹாசினி, ஆதவ் கண்ணதாசன், மங்கை ஹரி ராஜன், பட்டுக்கோட்டை பிரபாகர், சித்ரா லக்ஷ்மன், எச் முரளி, கலை ஞானம், ஆடை வடிவமைப்பாளர் தக்ஷா, லொள்ளு சபா ஜீவா, எஸ் ராமகிருஷ்ணன், மனோபாலா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ராம்பாலா, பாஸ்கி, நடன இயக்குநர்கள் ஷெரிப், சாண்டி, சந்தோஷ் பிரதாப், லலிதா, ஸ்ரீதர், ரேகா, லிஸ்ஸி, பைவ் ஸ்டார் கதிரேசன், படத்தொகுப்பாளர் மோகன், என ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
“என் வாழ் நாள் முழுவதும் என்னுடைய குரு கே. பாக்கியராஜ் அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவருடைய மகன் சாந்தனுவிற்கு, தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான கதாநாயகனாக வலம் வரக் கூடிய எல்லா சிறப்பம்சங்களும் இருக்கின்றது. ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம் அதை உறுதி செய்யும். என்னுடைய குருநாதரின் இயக்கத்தில் நான் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. நான் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்குபவர் பாக்கியராஜ் சார், கதாநாயகன் அவருடைய மகன் சாந்தனு,” என்றார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.
“என்னிடம் பணி புரிந்த, பணி புரிந்து கொண்டிருக்கின்ற உதவியாளர்கள் இந்த விழாவில் இருக்கின்றார்கள். அதற்கும் மேலாக, என்னுடைய குருநாதர், எங்க இயக்குநர் திரு பாரதி ராஜா சார் இங்கு என்னோடு இருக்கிறார்கள். இதைவிட என் வாழ்நாளில் மகிழ்ச்சிகரமான நாள் இருக்க முடியாது,” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் கே. பாக்யராஜ்.
‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.