‘பாட்ஷா’ டிஜிட்டல் படம் பார்த்த கலைஞர்

தி.மு.க. தலைவர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் அவரைப் பார்த்து நலம் விசாரிக்க பலரும் சென்று வருகிறார்கள். அவரைப் பார்க்க வருபவர்களின் விவரங்கள் அவருக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறதாம்.

அப்படி அவரைப் பார்க்கச் சென்றவர்களில் திரைப்பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும் ஒருவர்.

சுரேஷ் கிருஷ்ணா தன்னைப் பார்க்க வந்து சென்றுள்ளார் என்பதை அறிந்த கலைஞர், ‘பாட்ஷா’ படத்தின் டிஜிட்டல் வடிவத்தை உடனே பார்க்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

இரவோடு இரவாக ‘பாட்ஷா’ படத்தின் டிஜிட்டல் வடிவம் அவருக்கு மருத்துவமனையிலேயே பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

1995ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய ‘பாட்ஷா’ படத்தை டிஜிட்டல் வடிவத்தில் புதிய ஒளி, ஒலி அமைப்புடன் திரையிடும் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

 

Read Previous

Vijay Antony signed his seventh

Read Next

Baasha digitised teaser released