100/100 தரலாம், ‘துருவங்கள் 16’க்கு இயக்குனர் சுந்தர் .சி பாராட்டு

நைட் நோஸ்டால்ஜியா ஃபிலிமொடெயின்மென்ட், வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் டிரீம் ஃபேக்டரி வெளியிட கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘துருவங்கள் 16’.

இப்படத்தைப் பார்த்த இயக்குனர் சுந்தர். சி படத்திற்கு 100க்கு 100 மார்க் தரலாம் எனப் பாராட்டியுள்ளார்.

“இந்தப் படம் தமிழில் அரிதான முயற்சி. இந்த வகையில் இதுவே முதல் படம் என்று கூறலாம். புதிய இளைஞர்கள் தொழில்நுட்ப ரீதியாக வெற்றி பெற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு 100 க்கு 100 மார்க் தரலாம். இயக்கம், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் எல்லாமே அருமை.

படம் ஹாலிவுட் தரத்துக்கு உள்ளது. யாரும் எதிர்பாராத க்ளைமாக்ஸ் அற்புதம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்த்தால் படம் மனநிறைவு தரும்.

இம்மாதிரி இளைஞர்களை ஊக்கப்படுத்தினால் மேலும் நல்ல படங்கள் வரும். படக் குழுவுக்கு எனது பாராட்டுக்கள்,” என்றார் இயக்குனர் சுந்தர். சி.

Read Previous

Enai Noki Paayum Thota – Official Teaser

Read Next

Balle Vellaiyathevaa Review & Rating

Most Popular