200ஐத் தாண்டும் 2016

2016ம் ஆண்டின் கடைசி மாதத்தின், கடைசி வாரத்தில் இருக்கிறோம். இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமையான 30ம் தேதியன்று ஆறேழு படங்கள் வெளிவர உள்ளன. கடைசி நேரத்தில் அதில் சில படங்கள் சேரலாம், சில படங்கள் விலகலாம்.

கடந்த வெள்ளிக் கிழமை 23ம் தேதியுடன் இந்த 2016ம் ஆண்டில் 196 படங்கள் வெளிவந்துள்ளன. 30ம் தேதியன்று வெளியாக உள்ள படங்களையும் சேர்த்தால் மொத்த எண்ணிக்கை 200ஐக் கடந்து விடும்.

2014ம் ஆண்டு, 2015ம் ஆண்டு ஆகிய இரண்டு வருடங்களைத் தொடர்ந்து இந்த வருடமும் படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடக்கப் போகிறது.

டிஜிட்டல் முறையில் திரைப்படங்கள் அதிகமாகத் தயாரிக்க ஆரம்பித்ததன் எதிரொலியாகவே கடந்த சில வருடங்களாக வெளிவரும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

200 படங்கள் வெளிவந்தாலும் சுமார் 20 படங்கள் வரையில் மட்டுமே வெற்றி பெறுகின்றன என்பது சோகமான செய்தி.

படங்களின் எண்ணிக்கை வளரும் அளவிற்கு படங்களின் தரமும் இன்னும் அதிகமானால் மட்டுமே தமிழ் சினிமா இன்னும் உயர முடியும்.

2016ம் ஆண்டு இதுவரை வெளியான படங்களைப் பற்றிய விவரத்தைப் பார்க்க…

இங்கே க்ளிக் செய்யவும்…. ←

Read Previous

Balle Vellaiyathevaa Review & Rating

Read Next

Kaatril Oru Rajaali – The alternate world of Dhuruvangal Pathinaaru

Most Popular