மீடியாக்கள் பாராட்டும் ‘அச்சமின்றி’

டிரிபிள் வி ரிக்கார்ட்ஸ் வி. வினோத்குமார் தயாரிப்பில் ராஜ பாண்டி இயக்கத்தில் விஜய் வசந்த், சமுத்திரக்கனி, சிருஷ்டி டாங்கே மற்றும் பலர் நடித்து இன்று வெளியாகும் படம் ‘அச்சமின்றி’.

ராஜபாண்டி – விஜய் வசந்த் கூட்டணியில் இதற்கு முன் வெளிவந்த ‘என்னமோ நடக்குது’ படம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்ற படம்.

இந்தக் கூட்டணியின் இரண்டாவது படமான ‘அச்சமின்றி’ படத்தில் கல்விக் கொள்ளையை மையப்படுத்திய கதையை அமைத்துள்ளார்கள்.

சமுத்திரக்கனி முக்கியமான கதாபாத்திரத்திலும், சரண்யா வில்லித்தனமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று முன் தினம் நடைபெற்றது. படத்தைப் பார்த்த அனைத்துப் பத்திரிகையாளர்களுமே நாட்டுக்குத் தேவையான ஒரு நல்ல கருத்தை இந்தப் படம் வலியுறுத்துகிறது என படக்குழுவினரைப் பாராட்டினார்கள்.

அதே வரவேற்பு, இந்தப் படத்திற்கு ரசிகர்களிடத்திலும் கிடைக்கும் என படக்குழுவினர் நம்புகிறார்கள்.

Read Previous

துருவங்கள் 16 – விமர்சனம்

Read Next

From The Bottom Of Our Hearts – Taramani

Most Popular