அஜித் பட வெளியீடுகளும், 10ம் எண் சென்டிமென்ட்டும்…

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் ரஜினிகாந்தின் வசூலையே முறியடித்தவர் என அஜித்தை அவரது ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

2019 ஜனவரி 10 அன்று வெளியான ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் வசூலை விட, அதே தினத்தில் வெளியான அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ அதிகமான வசூலைப் பெற்றது என்பதுதான் திரையுலக வட்டாரங்களில் சொல்லும் உண்மை.

அஜித் அடுத்து நடித்து வரும் ‘நேர் கொண்ட பார்வை’ படம் மே மாதம் 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

கடந்த சில வருடங்களாக அஜித் நடித்து வெற்றி பெற்ற படங்கள் 10ம் தேதியில் வெளியான படங்களாக இருப்பதால், ‘நேர் கொண்ட பார்வை’ படத்தையும் 10ம் தேதியில் வெளியிடுகிறார்கள் என சொல்கிறார்கள்.

அஜித் நடித்து இந்த ஆண்டு வெளிவந்த ‘விஸ்வாசம்’ படம் ஜனவரி 10ம் தேதி வெளிவந்தது. 2015ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி வெளிவந்த ‘வேதாளம்’ படமும்,  2014ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி வெளிவந்த ‘வீரம்’ படமும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

அதே சமயம், 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி வெளிவந்த ‘விவேகம்’ படமும், 2015ல் பிப்ரவரி 5ம் தேதி வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படமும் தோல்விப் படங்களாக அமைந்தன.

அஜித் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உள்ளவர். பொதுவாக, வியாழக்கிழமை சென்டிமென்ட் பார்ப்பவர். ஜோதிடத்தின்படிதான் அவர் பட முடிவுகளையும் எடுப்பார் என்று ஒரு தகவல் திரையுலகில் உண்டு.  இப்போது 10ம் எண் சென்டிமென்ட்டையும் பார்க்க ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள்.

Read Previous

ராதாரவி அவதூறு பேச்சு, நயன்தாரா கண்டன அறிக்கை

Read Next

Devi 2 – Official Teaser