‘பைரவா’ – உலகம் முழுவதும் 55 நாடுகளில் வெளியீடு

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள ‘பைரவா’ படம் உலகம் முழுவதும் 55 நாடுகளில் ஜனவரி 12ம் தேதியன்று பிரம்மாண்டமாக வெளியாகிறது.

ஏ & பி நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தப் படத்தை ஆப்பிரிக்க நாடுகளிலும் சேர்த்து வெளியிடுகிறது.

நைஜீரியா, கானா, கென்யா, உகான்டா, ஜாம்பியா, டான்சானியா, போட்ஸ்வானா, காங்கோ, உக்ரைன் உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளிலும், அல்பேனியா, மெக்சிகோ, லிதுவேனியா, லாட்வியா, போலந்து, எத்தியோப்பியா, ருவான்டா, ரஷ்யா ஆகிய நாடுகளில் முதல் முறையாக வெளியாகும் ஒரு தமிழ்ப்படமாக ‘பைரவா’ அமைந்துள்ளது.

மொத்தத்தில் உலகம் முழுவதும் 55 நாடுகளில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவின் வெளிநாட்டு வினியோகத்தில் இது ஒரு சிறந்த சாதனையாகும்.

Read Previous

Dhuruva Natchathiram to kickstart 9 January

Read Next

Trisha resumes work after holiday

Most Popular