உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் 88 நாட்களில் 350 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது.
ரௌடி பேபி பாடல் நிகழ்த்தியுள்ள சமீபத்திய சாதனைகள்…
யு டியுபில் அதிகமாகப் பார்வையிடப்பட்ட 50 வீடியோ பாடல்களில் தற்போது 45வது இடத்தில் உள்ளது. இந்த சாதனை 88 நாட்களில் நிகழ்ந்துள்ளது.
இந்திய அளவில் யு டியுபில் அதிகமாக லைக் பெற்ற 25 வீடியோக்களில் 1.9 மில்லியன் லைக்குகள் பெற்று தற்போது 18வது இடத்தில் உள்ளது.
350 மில்லியன் பார்வைகளை 88 நாட்களில் பெற்றுள்ளது.
300 மில்லியன் பார்வைகள் – 71 நாட்கள்
250 மில்லியன் பார்வைகள் – 55 நாட்கள்
200 மில்லியன் பார்வைகள் – 42 நாட்கள்
150 மில்லியன் பார்வைகள் – 31 நாட்கள்
100 மில்லியன் பார்வைகள் – 18 நாட்கள்
விஜய் டிவியில் நாளை மார்ச் 31, 2019 மதியம் 3 மணிக்கு ‘மாரி 2’ முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது.