தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ள ‘டோரா’ படம் நாளை வெளியாக உள்ளது.
நாளை வெளியாக உள்ள ஆறு படங்களில் ‘டோரா’ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் சேதுபதி, டிஆர் நடித்துள்ள ‘கவண்’ படம் பெரிய அளவில் மக்களைச் சென்றடையவில்லை. இப்படத்தின் டிரைலருக்கும் கூட பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
நயன்தாரா தனி கதாநாயகியாக நடித்து இதற்கு முன் வெளிவந்த ‘மாயா’ படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.
அந்தப் படத்தைப் போலவே ‘டோரா’ படமும் நல்லதொரு வெற்றியைப் பெறும் என்கிறார்கள்.