அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த ‘குற்றம் 23’ பெரிய வெற்றியைப் பெற்றது.
அப்படத்தைத் தயாரித்த ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக இந்தர் குமார் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் அருண் விஜய் மீண்டும் நாயகனாக நடிக்க உள்ளார்.
“முன் தினம் பார்த்தேனே, தடையறத் தாக்க, மீகாமன்” போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குகின்றார்.
‘என்னை அறிந்தால், குற்றம் 23’ படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த அருண் விஜய் இந்த படத்தில் புதிய பரிமாணத்தில் நடிக்க உள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘தடையறத் தாக்க’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு படம்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.