தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் ‘ப. பாண்டி’ படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
ராஜ்கிரண் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரேவதி நடித்துள்ளார். பிரசன்னா, சாயாசிங், வித்யுலேகா ராமன், ரின்ஸன், தீனா (அறிமுகம்), ஆடுகளம் நரேன், பாஸ்கர், மாஸ்டர் எம்.பி.ராகவன், பேபி சவி ஷர்மா, சென்ராயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சிறப்பு தோற்றத்தில் மடோனா செபாஸ்டின். நட்பு தோற்றத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் பாலாஜி மோகன், ரோபோ சங்கர் மற்றும் திவ்யதர்ஷினி நடித்துள்ளனர்.
இப்படத்தின் இரண்டு டிரைலர்களுக்கும், பாடல்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நடிகர் ராஜ்கிரணை, தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜா முதன் முதலில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய ‘என் ராசாவின் மனசிலே’ படம் 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியானது.
26 வருடங்கள் கழித்து கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷ், ராஜ்கிரணை ஹீரோவாக நடிக்க வைத்துள்ள ‘ப.பாண்டி’ ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.