‘குயின்’ தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால் ?

கங்கனா ரனவத் நடிக்க 2013ம் ஆண்டு வெளிவந்த ஹிந்திப் படமான ‘குயின்’ படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது.

அப்படத்தில் நாயகியாக நடித்த கங்கனா ரனவத் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

அப்படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கினார்.

தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் நடிகை ரேவதி இப்படத்தை இயக்குவதாக இருந்தது. தற்போது அவர் இந்த படத்திலிருந்து விலகிவிட்டார்.

இரு தினங்களுக்கு முன்பு கன்னடத்தில் இப்படத்தை ஆரம்பித்தனர். நடிகர் ரமேஷ் அரவிந்த் கன்னட ரீமேக்கை இயக்குகிறார். பருல் யாதவ் நாயகியாக நடிக்கிறார். எமி ஜாக்சன் நான்கு மொழிகளிலும் ஹிந்தியில் லிசா ஹைடன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது.

தமிழ் ரீமேக்கையும் ரமேஷ் அரவிந்த் இயக்க உள்ளார். காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க சம்மதித்துள்ளதாகவும் தெரிகிறது.

கன்னடத்தில் இப்படத்திற்கு ‘பட்டர்ஃபிளை’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். மற்ற மொழிகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

Read Previous

பெண் இயக்குனர் உஷா கிருஷ்ணன் -ன் பெருமை மிக்க தானம்

Read Next

Velai Illa Pattadhaari 2 – Official Teaser