‘விஐபி’ 2 டீசர் – 4 உதை, 4 கருத்து…

தனுஷ், அமலா பால், கஜோல் மற்றும் பலர் நடிக்க ஷான் ரோல்டன் இசையமைப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் டீசரை சற்று முன்பு ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் டிவிட்டரில் வெளியிட்டார்.

வெளியான அரை மணி நேரத்திற்குள்ளேயே சுமார் 85,000 பார்வைகளை இந்த டீசர் பெற்றது.

‘விஐபி 2’ டீசர் மொத்தமே 37 வினாடிகள் மட்டுமே இருக்கிறது. அதிலும் சமுத்திரக்கனி வழக்கம் போல தன்னுடைய கருத்துக்களைப் பதிவிட்டு கருத்துக்கனியாகப் பேசுகிறார்.

டீசரில் அவர் மட்டுமே 4 கருத்துக்களைச் சொல்கிறார். தனுஷ் 4 உதை உதைக்கிறார், ஒரு முறைப்பைக் காட்டுகிறார். ஒவ்வொன்று அவருடைய ரசிகர்களுக்கு அதிரடியாக இருக்கும்.

டீசரில் சமுத்திரக்கனியின் கருத்து வசனங்கள்….

ஒருத்தனுக்கு எதிரிங்க அதிகமாக இருந்தால் அவனைப் பார்த்து எல்லாரும் பயப்படறாங்கன்னு அர்த்தம்…

இப்பதான் உன்னுடைய துறையில நீ ஏதோ உருப்படியா செஞ்சிட்டிருக்கிறன்னு அர்த்தம்…

எதிரியே இல்லன்னா வாழ்க்கையே போர்டா…

இந்த எதிரிங்கள்லாம் அவங்களா வருவாங்க…அவங்களாவே போயிடுவாங்க…

‘விஐபி’ டீசரைப் பார்க்க….

Read Previous

Velai Illa Pattadhaari 2 – Official Teaser

Read Next

‘ரங்கூன்’ – வெற்றி பெறுவாரா கௌதம் கார்த்திக் ?

Most Popular