‘ரங்கூன்’ – வெற்றி பெறுவாரா கௌதம் கார்த்திக் ?

ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக், சனா மக்பூல் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ரங்கூன்’.

இப்படம் நாளை மறுநாள் ஜுன் 9ம் தேதி வெளியாக உள்ளது. சுமார் 150 தியேட்டர்கள் மட்டுமே இப்படத்திற்குக் கிடைத்துள்ளன.

‘ரங்கூன்’ படம் யாருக்கு முக்கியமோ இல்லையோ படத்தின் நாயகன் கௌதம் கார்த்திக்குக்கு மிக மிக முக்கியம்.

‘கடல், என்னமோ எதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம்’  என கடந்த நான்கு வருடங்களில் கௌதம் கார்த்திக் நடித்த நான்கு படங்களுமே தோல்விப் படங்கள்தான்.

அதனால்தான் ‘ரங்கூன்’ படத்தை வாங்குவதில் வினியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டவில்லையாம்.

இருந்தாலும் படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அதுவே படத்தின் வரவேற்புக்கும் காரணமாக அமைந்துவிடும் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருக்கிறார்களாம்.

எது எப்படியோ படம் வெற்றி பெற்றால்தான் கௌதம் கார்த்திக் நடிக்கும் அடுத்தடுத்த படங்களுக்கும் வரவேற்பு இருக்கும்.

 

Read Previous

‘விஐபி’ 2 டீசர் – 4 உதை, 4 கருத்து…

Read Next

ஜுன் 23ம் தேதி யாருக்கு வெற்றி ?

Most Popular