96 – ஏங்க வைக்கும் காதல் கதை – விஜய் சேதுபதி

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிக்க ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரேம்குமார் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘96’.

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். காளிவெங்கட், வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்தப் படத்தைப் பத்தி சொல்லணும்னா சிறு வயது காதல் கதைன்னு சொல்லலாம், முதிர்ச்சியான காதல் கதைன்னு சொல்லலாம். எல்லோரும் வாழ்க்கையில ஏங்கற ஒரு காதல் கதைன்னு சொல்லலாம்.

நம்ம வாழ்க்கையில நடக்காதான்னு ஒரு ஏக்கம் வரும். இந்தக் கதை வந்து படம் பார்க்கிற எல்லாரையும் டைம் மிஷின் மாதிரி வேற ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போகும்னு நம்பறேன், ஏன்னா என்னை அப்படி கூட்டிட்டு போச்சி.

உணர்வுகளால மட்டுமே பின்னப்பட்ட கதை. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் பார்த்து உங்களைப் போலவே ரொம்ப ரசிச்சேன். ஜெஸ்ஸிய அவ்வளவு பிடிக்கும்,” என்றார் விஜய் சேதுபதி.

“நான் இந்த மாதிரி ஒரு காதல் கதை பண்ணி ரொம் நாளாச்சி. விஜய் சேதுபதி கூட முதல் முறையா பண்றேன். காதல் கதைக்கு ஜோடி ரொம்ப முக்கியம், அது இந்தப் படத்துலு இருக்கும். கதை கேக்கும் போது கிளைமாக்ஸ்ல கண்ணுல தண்ணி வந்துடுச்சி,” என்றார் த்ரிஷா.

‘96’ என்பது அந்த வருடத்தில் பள்ளியில் படித்த மாணவர்களின் ‘பேட்ச்’ என்பதை ஞாபகப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள தலைப்பு,” என்கிறார் இயக்குனர் பிரேம்குமார்.

அந்தமானில் விஜய்சேதுபதி, திரிஷா சம்மந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

அத்துடன் கல்கத்தா, ராஜஸ்தான், பாண்டிச்சேரி, கும்பகோணம், சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

Read Previous

சத்ரியன் விமர்சனம்

Read Next

Ivan Thanthiran – Sneak Peek