கௌதம் கார்த்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடிக்க கண்ணன் இயக்கத்தில் தமன் இசையமைத்திருக்கும் ‘இவன் தந்திரன்’ படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குனர் கண்ணன்,
“தெலுங்குல மகேஷ் பாபு எப்படி ஒரு பெரிய ஹீரோவாக இருக்காரு, அதே மாதிரி இன்னும் இரண்டு வருஷத்துல தமிழ்ல கௌதம் கார்த்திக் வந்துடுவாரு.
நான் பொய்யலாம் சொல்லலலை, உண்மையா சொல்றேன். ஷுட்டிங்குக்கு காலைல 5 மணிக்கு சைக்கிள்ல வருவாரு, ஒரு சில நாள் ஹெல்மெட் மாட்டிக்கிட்டு பைக்ல வருவாரு, ஏன் சார்னு கேப்பேன், இல்லை எங்க அப்பாக்கு வந்த பேரு எனக்கு வரக் கூடாதுன்னு சொல்லுவாரு.
கடின உழைப்பாளி, பொறுப்பா இருப்பாரு. நல்லா நடிக்கக் கூடிய நடிகர். ஒரு டைரக்டரோட ஹீரோன்னு கௌதம் கார்த்திக்கை தைரியமா சொல்லலாம். டைரக்டர்ஸ் அவரை தைரியமா புக் பண்ணலாம். செலவு குறைவா பண்ணிக் கொடுத்துடுவாரு, உங்களுக்கு எந்த விதத்துலயும் நஷ்டம் வராது,” என தன் ஹீரோ கௌதம் கார்த்திக்கைப் பாராட்டிப் பேசினார் இயக்குனர் கண்ணன்.
நிகழ்ச்சியில் படத்தை வெளியிடும் தனஞ்செயன், தயாரிப்பாளர் ராம்பிரசாத், இசையமைப்பாளர் தமன், நாயகி ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி, தயாரிப்பாளர்கள் டி.சிவா, கலைப்புலி எஸ்.தாணு, ‘ரங்கூன்’ இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, ‘உறியடி’ இயக்குனர் விஜய்குமார் , ‘சேதுபதி’ இயக்குனர் அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் ஆர்யா படத்தின் இசையை வெளியிட்டார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.