300 தியேட்டர்களில் வெளியாகும் ‘மரகத நாணயம்’

ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி சார்பாக ஜி. டில்லி பாபு தயாரிக்க சரவன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ரானி மற்றும் பலர் நடிக்கும் ‘மரகத நாணயம்’ படம் ஜுன் 16ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சுமார் 300 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

நகைச்சுவை, த்ரில்லர், ஃபேன்டஸி கலந்த படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் சரவன் தான் இயக்கியுள்ள முதல் படத்திலேயே படத் தயாரிப்பாளருக்கு திருப்தியளிக்கும் விதத்தில் இப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

ஜுன் 16ம் தேதி ஐந்து படங்கள் வெளிவந்தாலும் ‘மரகத நாணயம்’ படம் மட்டும்தான் அதிகமான தியேட்டர்களில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் இதற்கு முன் வந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டியுள்ளார்கள் என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் டில்லிபாபு.

Read Previous

இயக்குனர்களின் நாயகன் கௌதம் கார்த்திக் – இயக்குனர் கண்ணன்

Read Next

நான் மட்டுமே கதை கேட்கிறேன் – கௌதம் கார்த்திக்

Most Popular