தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுந்தர் .சி இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஜெயம் ரவி, ஆர்யா மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்ட பொருட் செலவில் தயாராக உள்ள ‘சங்கமித்ரா’ படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் துவக்கி வைக்கப்பட்டது.
‘சங்கமித்ரா’வாக டைட்டில் ரோலில் நடிக்க தேர்வு செய்யப்பட்ட ஸ்ருதிஹாசன், கேன்ஸ் வரை துவக்க விழாவிற்குச் சென்று கலந்து கொண்டார். திரும்பி வந்ததும், படத்திலிருந்து விலகிவிட்டார். அவரை வைத்து முதல் பார்வை போஸ்டர்கள் கூட வெளியிடப்பட்டன. இருந்தாலும் அந்த விவகாரத்தை இருதரப்பிலும் மேலும் சர்ச்சை ஆக்கவில்லை.
ஸ்ருதிஹாசனுக்குப் பதிலாக ‘சங்கமித்ரா’ கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்று அடுத்து ஒரு பரபரப்பு எழுந்தது. நயன்தாரா முதல் பல்வேறு நடிகைகளின் பெயர்கள் அலசப்பட்டன.
தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ஹன்சிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் ஆரம்பமாக உள்ளது. இப்போது படப்பிடிப்புக்கு முந்தைய திட்டமிடல் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் ஓரிரு வாரங்களில் ‘சங்கமித்ரா’ கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.