‘குண்டு’, சர்வதேச அரசியல் படம் – தினேஷ்

‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் தினேஷ்.

தொடர்ந்து ‘குக்கூ, விசாரணை’ ஆகிய படங்களில் சவாலான கதாபாத்திரங்களில் நடித்தார்.

குக்கு மற்றும் விசாரணை படங்களைப் போல சவாலான கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் ‘திருடன் போலீஸ், அண்ணனுக்கு ஜே’ என பக்காவான எண்டெர்டெயினிங் கதாபாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர்.

இயக்குநர்களின் நடிகராக வலம் வரும் தினேஷ், அவசரப்படாமல் நிதானமாகவே படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன்ஆதிரை இயக்கத்தில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

“குண்டு படத்தை உலகின் எந்த நிலப்பரப்போடும் தொடர்புபடுத்தினாலும் அது அந்த நிலப்பரப்போடு பொருந்திப்போகும். ஒரு இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் இந்த படத்தில் இருக்கிறது. அதேசமயம் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும்படியும் , குடும்பங்கள், ,இளைஞர்கள், எல்லோருக்குமான ஒரு படமாக வந்திருக்கிறது. என் சினிமா கேரியரில் ரொம்ப முக்கியமான படம். ஒரு லாரி ஓட்டுனரின் மன நிலையில் லாரி ஓட்டுனராக வடதமிழகத்து இளைஞனாக நடித்தது புதிய அனுபவம்.

அடுத்தடுத்து தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு உகந்த கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன்,” என்கிறார் தினேஷ்.

Read Previous

மான்ஸ்டர் – டீசர்

Read Next

நடிகை த்ரிஷா திரைப்படப் பட்டியல்…

Most Popular