அர்ஜுன், வரலக்ஷ்மி சரத்குமார், பிரசன்னா, சுருதி ஹரிஹரன் மற்றும் பலர் நடிப்பில் அருண் வைத்யநாதன் இயக்கியுள்ள ‘நிபுணன்’ படம் ஜுலை 28ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மிக மிக வித்தியாசமான த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம் அர்ஜுன் நடித்து வெளிவரும் 150வது படம்.
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம் மற்றும் அருண் வைத்யநாதன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு நவீன் இசையமைத்துள்ளார். பாடல்களை மதன் கார்கி , அருண்ராஜ் காமராஜ் மற்றும் அருண் வைத்யநாதன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகிறது.