சார்மியின் திருமண ஆசைக்கு, சம்மதம் சொன்ன த்ரிஷா

செய்தியின் தலைப்பைப் பார்த்து குழம்பிப் போக வேண்டாம். மேலே படியுங்கள் புரியும்.

நடிகை த்ரிஷா இன்று அவருடைய 37வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு தமிழ், தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

அவர்களில் தெலுங்கு நடிகையான சார்மியும் ஒருவர். சிம்பு கதாநாயகனாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர்தான் சார்மி.

சார்மியும், த்ரிஷாவும் நெருங்கிய தோழிகள். இன்று த்ரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு சார்மி அவருக்கு வாழ்த்து சொன்னார்.

அந்த டிவிட்டர் வாழ்த்தில், “பேபி, உன்னை இன்றும் என்றென்றும் காதலிக்கிறேன். என்னைத் திருமணம் செய்து கொள் என முட்டி போட்டு காத்திருக்கிறேன். திருமணம் செய்து கொள்வோம். அது சட்டப்படி தற்போது அனுமதிக்கப்படுகிறது,” என்று அதிர்ச்சிகரமான வாழ்த்தைத் தெரிவித்தார்.

அதற்கு த்ரிஷா, “நான் எப்போதோ சரி என சொல்லிவிட்டேனே” என பதிலளித்திருக்கிறார்.

https://twitter.com/trishtrashers/status/1124646755117613057

Read Previous

நடிகை த்ரிஷா திரைப்படப் பட்டியல்…

Read Next

யாரும் இல்லாத இடத்தில் விளையாட முடியாது – யோகி பாபு