விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் சேதுபதி நடிப்பில் விஜய் சந்தர் இயக்கி வரும் படம் ‘சங்கத்தமிழன்’.
பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.
பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்துள்ள படம் ‘சங்கத்தமிழன்’. இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைக்கின்றனர்.
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், சூரி, அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தலைப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Here it is, presenting you the First look of #Sangathamizhan #VVV
@VijaySethuOffl @vijayfilmaker @RaashiKhanna @sooriofficial @ActorSriman @Cinemainmygenes @VelrajR @ActionAnlarasu @iamviveksiva @MervinJSolomon @SonyMusicSouth @RIAZtheboss pic.twitter.com/o2fdADW1Ly— Vijaya Productions (@VijayaProdn) May 7, 2019