பாண்டிராஜ் இயக்கிய ‘மெரீனா’ படத்தில்தான் சிவகார்த்திகேயன் முதல் முறையாக நாயகனாக அறிமுகமானார்.
அதன்பின் அவரது இயக்கத்தில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்திலும் நடித்தார். இப்போது 6 வருடங்கள் கழித்து மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் 16வது படமான இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாரதிராஜா , சமுத்திரக்கனி, நட்டி(எ) நடராஜ், RK சுரேஷ், சூரி , யோகி பாபு, வேலராமமூர்த்தி, நாடோடிகள் கோபால், சுப்பு பஞ்சு, அர்ச்சனா, ரமா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று எளிமையாக ஆரம்பமானது.
நிகழ்வில் இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், அர்ச்சனா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.