அஜித் ஜோடியாக நடித்தவர் வடிவேலுக்கு ஜோடி

அஜித் நடித்து 2012ம் ஆண்டு வெளிவந்த படம் ‘பில்லா 2’. இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக அறிமுகமானவர் பார்வதி ஓமனக்குட்டன். இவர் மிஸ் இந்தியா வேர்ல்டு, மிஸ் சவுத் இந்தியா ஆகிய பட்டங்களை 2008ம் ஆண்டு வென்றவர்.

‘பில்லா 2’ படம் படுதோல்வி அடைந்ததால் அவருக்குத் தொடர்ந்து தமிழ்ப் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடந்த வருடம் வெளிவந்த ‘நம்பியார்’ படத்தில் ஒரு கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார்.

சுமார் 5 வருடங்கள் கழித்து அவருக்கு இப்போது மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அஜித் ஜோடியாக நடித்தவர் வடிவேலு ஜோடியாக ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தில் நடிக்க சம்மதித்து இன்று அந்தப் படத்தின் பூஜையிலும் கலந்து கொண்டார்.

அஜித்துடன் ஜோடி சேர்ந்தவர் வடிவேலுவுக்கு ஜோடியா என திரையுலகத்தில் பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

Read Previous

‘தர்மதுரை’ படத்திற்கு வைகோ பாராட்டு மடல்…

Read Next

‘விவேகம்’ பார்த்துக் கொண்டிருக்கும் கமல்ஹாசன்

Most Popular