டிவி ரேட்டிங்கில் ‘விஸ்வாசம்’ புதிய சாதனை

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என புத்தம் புதிய படங்கள் டிவிக்களில் ஒளிபரப்பாகி வருவது வாடிக்கையாகிவிட்டது.

தியேட்டர்களில் நன்றாக ஓடிய படங்கள் டிவிக்களில் ஒளிபரப்பாகும் போதும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதுவரை தமிழ் டிவிக்களில் ஒளிபரப்பான படங்களில் விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படம்தான் அதிக தடப் பதிவை, அதாவது Impressions பெற்ற படமாக இருந்தது. அந்தப் படத்திற்கு 1,76,96,000 பதிவுகள் கிடைத்தன.

அதன் பிறகு டிவியில் ஒளிபரப்பான ‘சர்கார்’ படம் கூட அந்த சாதனையை முறியடிக்கவில்லை. ‘சர்கார்’ படத்திற்கு 1,69,06,000 தடப் பதிவுகள்தான் கிடைத்தன.

மே 1ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பான ‘விஸ்வாசம்’ படம் இதுவரை முதலிடத்தில் இருந்த ‘பிச்சைக்காரன்’ சாதனையை 1,81,43,000 தடப் பதிவுகள் பெற்று முறியடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனால், தற்போது ‘பிச்சைக்காரன்’ படம் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் ‘பிச்சைக்காரன்’ படம் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த சாதனையை தக்க வைத்துக் கொண்டிருந்தது.

1,70,70,000 தடப் பதிவுகளுடன் ‘பாகுபலி’ 3வது இடத்திலும், 1,69,06,000 பெற்று ‘சர்கார்’ 4வது இடத்திலும், 1,67,66,000 பெற்று ‘சீமராஜா’ 5வது இடத்திலும் உள்ளன.

https://twitter.com/SathyaJyothi_/status/1126415299270438913

Read Previous

தமிழ் சினிமா – இன்று மே 10, 2019 வெளியாகும் படங்கள்

Read Next

தனுஷ், விஜய் சேதுபதி படங்களுக்கு இடைக்காலத் தடை