‘பிக் பாஸ்’ – ஆரவ்-வுக்கு இன்று ஒரு குறும் படம்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறு அன்று காயத்ரி வெளியேறிய பின் இந்த வாரம் முழுவதும் நிகழ்ச்சி கொஞ்சம் கூட சுவாரசியம் இல்லாமல் போனது.

இந்த வாரம் கொடுத்த டாஸ்க்குகளில் அந்த ‘கொலையாளி’ டாஸ்க் மட்டும்தான் சுவாரசியமாக இருந்தது. கணேஷ், ரைசா, காஜல், பிந்து ஆகியோரை ஆரவ், ஹரீஷ் கல்யாண் கொலை செய்யத் தீட்டிய திட்டங்களும் அதை செயல்படுத்திய விதங்களும் அருமை.

மற்றபடி நிகழ்ச்சியில் வேறு எந்த சுவாரசியமும் இல்லை. ஒவ்வொரு நாளும் தன்னை ஒரு நேர்மையான போட்டியாளராகக் காட்டிக் கொண்டு, ஓவியா போல காப்பி அடிக்கும் சுஜா அதிகமாகவே எரிச்சலூட்டுகிறார். நாளை அவரை யாராவது நாமினேட் செய்து வரும் வாரத்தில் அவரை வெளியிற்றினால் நன்றாக இருக்கும்.

நேற்று நிகழ்ச்சியில் வந்த கமல்ஹாசன் கூட மொத்தமாக பத்து வரிகள் பேசியிருப்பாரா என்பது சந்தேகம்தான். போட்டியாளர்களுடன் உரையாடாமல், அவர்களுக்குள் குற்றம் சாட்டிக் கொண்டதை ஒரு மாதிரி நீதிமன்றம் வைத்து அவரே நீதிபதியாகவும் நடந்து கொண்டார். அப்போதும் அவர் அதிகம் பேசவில்லை.

இன்றாவது கமல்ஹாசன் சுவாரசியமாக ஏதாவது செய்வாரா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ரைசா எப்படியும் இன்று எவிக்ட் ஆகிவிடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அதே சமயம், சினேகனுக்கும், ஆரவ்வுக்கும் சில வாரங்களுக்கு முன்பு நடந்த சண்டையில் அவர் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்தது குறித்து இன்று வாக்குவாதம் நடக்கும் எனத் தெரிகிறது.

இன்று ஒளிபரப்பான புரோமோவில் அதுதான் உள்ளது. ஆரவ்வுக்காக ஒரு குறும்படத்தைக் காட்ட கமல்ஹாசன் தயாராக இருக்கிறார்.

ஏற்கெனவே, ஜுலி விஷயத்தில் மிகவும் பரபரப்பான குறும்படம் காட்டுதல், இன்றும் ஆரவ்வுக்காக ஒரு குறும்படத்தைக் காட்டி மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.

நேயர்களும் இன்றைய ஆரவ் குறும்படத்திற்குத் தயாராக இருக்கிறார்கள்.

அதோடு, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆர்த்தி, ஜுலி, சக்தி, பரணி ஆகியோர் இன்று சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசனுடன் உரையாட உள்ளார்கள்.

இன்றைய நிகழ்ச்சியில் ரைசா வெளியேற்றமும் நடக்க உள்ளது. ஆக, இன்று நடக்கும் மூன்று நிகழ்வுகள் மூலம் அடுத்த வார நிகழ்ச்சியாவது சுவாரசியமாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

Read Previous

‘விவேகம்’ – லாபம் தர எவ்வளவு வசூலிக்க வேண்டும் ?

Read Next

‘விவேகம்’ கதை என்னுடையது, குற்றம் சாட்டும் இயக்குனர், தயாரிப்பாளர்