‘கும்கி 2’ படப்பிடிப்பு இன்று ஆரம்பம்

பிரபு சாலமன் இயக்கத்தில் புதுமுகம் மதி, ஷிவானி மற்றும் பலர் நடிக்கும் ‘கும்கி 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தாய்லாந்தில் ஆரம்பமாகிறது.

‘கும்கி’ படத்தின் முதல் பாகம் 2012ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது. இப்படத்தில்தான் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமானார். லட்சுமி மேனன் நாயகியாக அறிமுகமானார். இமானின் இசையில் இனிமையான பாடல்களுடன் வெளிவந்த இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றது.

‘ கும்கி 2’ படத்தில் இயக்குனர் லிங்குசாமியின் உறவினரான மதி நாயகனாக அறிமுகமாகிறார்.

மதி நாயகனாக நடிக்க ஆரம்பித்த ‘ரா ரா ராஜசேகர்’ படம் கிடப்பில் போடப்பட்டது. பாலாஜி சக்திவேல் இயக்கி வந்த அந்தப் படம் இனிமேலும் தொடருமா என்பது சந்தேகம்தான். எனவே, ‘கும்கி’ படத்த்தைத் தயாரித்ததால் லிங்குசாமியின் வேண்டுகோளுக்கிணங்க பிரபு சாலமன் அவரது உறவினர் மதியை ‘கும்கி 2’ மூலம் அறிமுகப்படுத்துகிறார்.

‘கும்கி 2’ படத்தை சூர்யா நடித்த ‘அஞ்சான்’ படத்தைத் தயாரித்த பென் மூவீஸ் தயாரிக்கிறது.

Read Previous

‘குயின்’ ரீமேக்கில் தமன்னா, காஜல் அகர்வால் ?

Read Next

இப்போதைய இசையில் இரைச்சல் அதிகம்தான் – ஏ.ஆர்.ரகுமான்