
நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் 2026 ஆம் ஆண்டில், ஓடிடி உரிமைகளை வாங்கியுள்ள, வெளியாகிவிருக்கும் தமிழ்த் திரைப்படங்கள் பட்டியலை அறிவித்துள்ளது. முன்னணி நட்சத்திரங்கள், திறமையான இயக்குநர்கள் மற்றும் மொழிகள் தாண்டி பார்வையாளர்களைச் சென்றடையும் கதைகள் என பல தரமான படங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
’இட்லி கடை’, ’டிராகன்’, ’டியூட்’, ’குட் பேட் அக்லி’ போன்ற ரசிகர்கள் விரும்பிய மாஸ் ஹீரோக்களின் படங்களும் ‘பைசன்’, ’காந்தா’ போன்ற தரமான படைப்புகளும் கடந்த ஆண்டில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தன.
இந்த வெற்றியைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டில் தரமான தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள படங்களின் பட்டியலை அறிவித்துள்ளது.
இதுகுறித்து நெட்பிளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்கத் துறை துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் கூறியதாவது,
“வலுவான, உணர்வுபூர்வமான, அசல் கதைகளுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். நெட்பிளிக்ஸில் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள் இந்தியாவிலும் உலகளவிலும் பார்வையிடப்பட்டு, விவாதிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருவதை நாங்கள் கண்டுள்ளோம்.
பொங்கலை முன்னிட்டு தொடர்ந்து நான்காவது ஆண்டாக எங்களின் தமிழ் உரிமம் பெற்ற திரைப்படப் பட்டியலை அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம். ‘இட்லிகடை’, ’டியூட்’, ’டிராகன்’, ’பைசன்’ போன்ற படங்கள் நெட்பிளிக்ஸ் தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வருங்காலத்தில் இதுபோன்ற நல்ல கதைகளை திறமையான இயக்குநர்களுடன் சேர்ந்து பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் உற்சாகத்துடன் காத்திருக்கிறோம்,” என்றார்.
2026 ஆம் ஆண்டில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கும் திரைப்படங்களின் பட்டியல்.
• பெயரிடப்படாத படம், வெங்கி அட்லுரி இயக்கத்தில்சூர்யா, மமிதா பைஜு (சூர்யா 46), (தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• AGS 28 : அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன் (தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம்),
• புரொடக்ஷன் நம்பர் 1 : ரவி மோகன், எஸ். ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன் (தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• டயங்கரம் : வி.ஜே. சித்து (தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• கட்டா குஸ்தி 2 : விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி (தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• இதயம் முரளி : அதர்வா முரளி, காயடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் (தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• மார்ஷல் : கார்த்தி, கல்யாணி பிரியதர்ஷன் (தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• அன் ஆர்டினரி மேன் : யோகி பாபு (தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• பெயரிடப்படாத தனுஷ் மற்றும் ராஜ்குமார் படம் (தனுஷ் 55) : தனுஷ் (தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• வித் லவ் : அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் (தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• பெயரிடப்படாத சூர்யா மற்றும் ஜித்து மாதவன் படம் (சூர்யா 47) : சூர்யா, நஸ்ரியா நஸீம், நஸ்லென் கே. கஃபூர் (தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்)
• காரா: தனுஷ், மமிதா பைஜு (தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்)