கடைசி விவசாயி – இயக்குனர் மணிகண்டனுக்கு இயக்குனர் மிஷ்கின் பாராட்டு

‘காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த ‘கடைசி விவசாயி’ படம் விமர்சகர்களின் பெரும் பாராட்டுக்களைப் பெற்ற ஒரு படமாக அமைந்தது. நல்ல சினிமாவிற்காக ஏங்கித் தவித்த ரசிகர்களும் படத்தைப் பார்த்து வெகுவாகப் பாராட்டினர்.

தமிழ்த் திரையுலகத்தில் இருந்து பலரும் படத்தைப் பார்த்து பாராட்டினர். தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவராக அறியப்படும் மிஷ்கினும் படத்தைப் பார்த்து இயக்குனர் மணிகண்டனை அவரது சொந்த ஊருக்கே சென்று பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கடைசி விவசாயி தந்த மகா கலைஞனான மணிகண்டனை அவன் ஊரான உசிலம்பட்டிக்குச் சென்று சந்தித்தேன், ஆரத் தழுவினேன். மிகச் சிறந்த படைப்பைத் தமிழுக்குத் தந்த அவனுக்கு நன்றி கூறி, அவன் கரங்களை முத்தமிட்டேன். 
படத்தின் கதையின் நாயகனாக, ஒட்டுமொத்த இந்தியாவின் எல்லா விவசாயிகளின் அடையாளமாக வாழ்ந்த பெரியவரின் வீட்டுக்குச் சென்று அவர் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினேன்.  

மணிகண்டன் படப்பிடிப்பு செய்த இடத்திற்குச் சென்று மதிய உணவு உண்டோம். இந்த முழு நாளும் ஒரு அற்புத நாளாக மாறியது.

மணிகண்டா, உன் பயணம் தொடரட்டும். உன்னை இயற்கை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்,” என்று பாராட்டியுள்ளார்.

Read Previous

சமந்தா நடிக்கும் ‘சாகுந்தலம்’ முதல் பார்வை

Read Next

‘விசித்திரன்’ படத்திற்காக நிறைய உழைத்தேன் – ஆர்கே சுரேஷ்

Most Popular