சமந்தா நடிக்கும் ‘சாகுந்தலம்’ முதல் பார்வை

தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான குணசேகரன் இயக்கத்தில் சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘சாகுந்தலம்’ படத்தின் முதல் பார்வை இன்று வெளியானது.

தெலுங்கில் உருவாகியிருக்கும் இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் சேர்த்து பான்-இந்தியா படமாக வெளியாக உள்ளது.

ஒரு காட்டில் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றுடன் சேர்ந்து சமந்தா அமர்ந்திருக்கும் இப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியானது. சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இந்த முதல் பார்வைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

மணிசர்மா இசையமைக்க,  சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் மகள் அல்லு அர்ஹா அறிமுகம் ஆகும் இப்படத்தில்,  மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

குணா டிஆர்பி டீம் ஒர்க்ஸ் சார்பில் நீலிமா குணா, மிகப் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கிறார். பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு, சாகுந்தலம் படத்தை வழங்குகிறார். 

Read Previous

கலர்ஸ் தமிழ் டிவி – ‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ புதிய நெடுந்தொடர்

Read Next

கடைசி விவசாயி – இயக்குனர் மணிகண்டனுக்கு இயக்குனர் மிஷ்கின் பாராட்டு

Most Popular