பா.விஜய் இயக்கத்தில் ‘மேதாவி’

மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா தயாரிக்க உள்ள படம் ‘மேதாவி‘. 

இன்று  பிறந்த நாள் கொண்டாடும் தயாரிப்பாளர் சு.ராஜா, “மேதாவி” படத்தின் அறிவிப்பை வெளியிட்டதோடு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம்  பெப்சி தொழிலாளர்களுக்காக 5 கிலோ கொண்ட 25,000 அரிசி மூட்டைகளை (1,25,000 கிலோ) கொரானோ நிவாரண உதவியாக வழங்கினார். 

ஹாரர் திரில்லர் படமாக உருவாக உள்ள இப்படத்தில் அர்ஜூன், ஜீவா முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார். 

ஷாரா, 'கைதி' தினா, ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா சங்கர், ராதாரவி, Y.G. மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகிணி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தீபக் குமார் பாடி ஒளிப்பதிவு மேற்கொள்ள, சான்லோகேஸ் படத்தொகுப்பு செய்கிறார்.

Read Previous

7 புதிய படங்களை நேரடியாக வெளியிடும் அமேசான் பிரைம்

Read Next

வெள்ளை யானை – Juke Box