100 மில்லியன் பார்வைகளைத் தொட்ட ‘மாஸ்டர்’ – வாத்தி கம்மிங்…பாடல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘வாத்தி கம்மிங்’ என்ற பாடலின் பாடல் வரிகள் வீடியோ கடந்த வருடம் மார்ச் 10ம் தேதி யு டியுபில் வெளியிடப்பட்டது.

சூப்பர் ஹிட் பாடலாக அமைந்த அப்பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளை யு டியுபில் கடந்துள்ளது.

விஜய் நடிப்பில் இதுவரை வெளிவந்த படங்களின் பாடல்களில் 100 மில்லியனைக் கடந்த நான்காவது பாடல் இது.

இதற்கு முன்பு ‘மெர்சல்’ படத்தின் ‘ஆளப் போறான் தமிழன்…’ பாடல், ‘பிகில்’ படத்தின் ‘வெறித்தனம்…’ பாடல், ‘தெறி’ படத்தின் ‘என் ஜீவன்..’ பாடல், ஆகிய பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

‘மாஸ்டர்’ படம் வரும் ஜனவரி 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Read Previous

புயல், மழையில் படமாக்கப்பட்ட ‘மாறா’

Read Next

ஜனவரி 6ம் தேதியில் வெளியான படங்கள்…

Most Popular