கொரானோ ஊரடங்கு இந்த 21 நாள் இல்லாமல் இருந்திருந்தால் இன்று ஏப்ரல் 9ம் தேதி விஜய், விஜய் சேதுபதி நடித்த ‘மாஸ்டர்’ படம் வெளிவந்திருக்கும்.
இருந்தாலும் இன்று படம் வெளியாகியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் ஒரு கொண்டாட்டத்தையே கொண்டாடி முடித்துவிட்டார்கள்.
படம் இன்று வெளியாகவில்லையே என்று விஜய் ரசிகர்களுக்கு ஒரு புறம் ஏமாற்றம் இருந்தாலும் அவர்களுக்காக படக்குழுவினர் அப்டேட் கொடுத்து அந்த ஏமாற்றத்தைத் தணித்துவிட்டனர்.
தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்ட அப்டேட்டில், “நாங்கள் உங்களை மிஸ் செய்துள்ளோம், நீங்கள் எப்படி எங்களை மிஸ் செய்துள்ளீர்களோ அப்படியே.
ஒரு மாஸ்டர் மைன்ட் எதிர்ப்பு மருந்து கண்டுபிடித்து கொரானோவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இன்னும் வலிமையாக நாங்கள் வருவோம் நண்பா, வீட்டிலேயே பாதுகாப்பா இருங்கள்,” எனத் தெரிவித்துள்ளார்கள்.
படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், “வாழ்வது முக்கியம், கொண்டாட்டம் அடுத்து…மாஸ்டர் சரியான நேரத்தில் எழுவார்,” எனக் கூறியுள்ளார்.