ஏஆர் ரகுமான் இசையமைப்பில் 2009ல் வெளிவந்த ‘டெல்லி 6’ படத்தில் இடம் பெற்ற பாடல் ‘மசக்கலி, மசக்கலி’.
சூப்பர் ஹிட் பாடலான அந்தப் பாடலின் இசை உரிமத்தை வைத்திருக்கும் டி சீரிஸ் ஆடியோ நிறுவனம் நேற்று ரீ மிக்ஸ் செய்து வெளியிட்டது.
ஏற்கெனவே, தன் பாடல்கள் ரீமிக்ஸ் செய்வதைப் பிடிக்காமல் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார் ஏஆர் ரகுமான்.
இந்நிலையில் நேற்று ‘மசக்கலி’ பாடலின் ரீமிக்ஸ் வெளியானதைத் தொடர்ந்து ‘என்ஜாய் தி ஒரிஜனல்’ என டிவீட் போட்டு அப்பாடல் பற்றி பிதிவிட்டிருக்கிறார். எதற்குமே கோபப்படாத ஏஆர் ரகுமான் தற்போது இந்த ரீமிக்ஸ் பாடலுக்காக கோபப்பட்டிருந்தாலும் அதைக் கூட நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகவே வெளிப்படுத்தி இரு
அதில், “குறுக்கு வழியில்லை, சரியாக உருவாக்கப்பட்டது, தூங்காத இரவுகள், எழுதி, திரும்பவும் எழுதி, 200க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள், 365 நாளின் படைப்பு, கடைசி தலைமுறை வரைக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் 365 நாட்கள் மூளையைக் கசக்கி உருவாக்கிய பாடல்.
இயக்குனரின் குழு, ஒரு இசையமைப்பாளர், ஒரு பாடலாசிரியர், நடிகர்கள், நடன இயக்குனர்கள் ஆகியோரின் ஆதரவு, இடைவிடாத படக்குழு,” என பதிவிட்டு அவர் இசையமைத்த ‘மசக்கலி’ பாடலின் லின்க்கையும் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தாலும், நேற்று வெளியான ரீமிக்ஸ் பாடல் அதற்குள் யு டியூபில் 1 கோடியே 60 லட்சம் பார்வைகளைப் பெற்றுவிட்டது.
மசக்கலி 2.0 – ரீமிக்ஸ் பாடல்
மசக்கலி – டெல்லி 6 – ஒரிஜனல்