இந்திப்படம் இயக்கும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர்

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக இந்திப் படமொன்றை இயக்கவுள்ளார்.

சிதம்பரம் இயக்கத்தில் செளபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. மலையாளத்தில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பினைப் பெற்றது. குறிப்பாக தமிழில் அனைத்து தரப்பு மக்களும் இந்தப் படத்தினை கொண்டாடி தீர்த்தார்கள்.

ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் படக்குழுவினரை அழைத்து பாராட்டினார்கள். இதனால் அடுத்ததாக சிதம்பரம் தமிழ் படமொன்றை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக விக்ரமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தற்போது இந்திப் படமொன்றை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிதம்பரம். ‘குயின்’, ‘பாம்பே வெல்வெட்’, ‘மசான்’, ‘அக்லி’, ‘சூப்பர் 30’ உள்ளிட்ட வித்தியாசமான படங்களை தயாரித்த ஃபேண்டம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தான் சிதம்பரத்தின் முதல் இந்திப் படத்தினை தயாரிக்கவுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Read Previous

தீபாவளிக்கு வெளியாகிறது சிவகார்த்திகேயனின் “அமரன்”

Read Next

’வாரிசு’ படத்தில் காட்சிகள் நீக்கம் ஏன்? – குஷ்பு விளக்கம்

Most Popular