விரைவில் நாயகன் லோகேஷ் கனகராஜ்

விரைவில் நாயகனாக நடிக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.

’கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ ஆகிய படங்களின் மூலம் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். தற்போது ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தினை இயக்கி வருகிறார். சென்னையில் 2-ம் கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு அன்பறிவ் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அப்போது லோகேஷ் கனகராஜுக்கு நாயகன் ஆசை இல்லை என்று கூறப்படுகிறது. இப்போது ஒரு படத்தில் நாயகனாக நடிக்கலாம் என முடிவு செய்துவிட்டார் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷ் கனகராஜுக்கு ஏற்றார் போல் சரியான கதையை உருவாக்கிவிட வேண்டும் என்று அவரிடம் பணிபுரியும் உதவி இயக்குநர்கள் எழுதி வருகிறார்கள். ‘கூலி’ முடித்தவுடன் நாயகனாக நடிக்கவுள்ளாரா அல்லது ‘கைதி 2’ படத்துக்கு பின்பு நடிக்கவுள்ளாரா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

ஆனால், லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிப்பது மட்டும் இப்போதைக்கு உறுதியாகி இருக்கிறது.

Read Previous

ஜூலை 26 அன்று வெளியாகும் டெட்பூல் & வால்வரின்

Read Next

’சர்தார் 2’ அப்டேட்: ஜெயராம் ஒப்பந்தம்